இலங்கையில் நடைபெற்றுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, ஆஸ்திரேலிய தூதுவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அநுரவின் ஆட்சியின்கீழ் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது எனவும் தூதவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பதவி விலகினார். இதனையடுத்து அமைச்சரவையும் கலந்துள்ளது. அநுரகுமார திஸாநாயக்க 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அவர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமையவுள்ளது.