இஸ்ரேலிய தீவிர வலதுசாரி அரசியல்வாதியான சிம்சா ரோத்மேனுக்கு ஆஸ்திரேலியா வருவதற்கு விசா மறுக்கப்பட்டாலும், அவரது நிகழ்வு திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய யூத சமூகமே இந்த அறிவிப்பை விடுத்துள்ளதுடன், அவர் நிகழ்நிலைமூலம் தோன்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூத சமூகம் அடிபணியாது என அச்சமூகத்தினர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்பேர்ணில் நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் சிம்சா ரோத்மேன் உரையாற்றவிருந்தார். இதற்காக அவர் விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.