சுயாதீன செனட்டர் பாத்திமா பேமனுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த மேற்கு விக்டோரியாவை சேர்ந்த நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
குறித்த நபர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
செனட்டர் பேமன் பயங்கரவாதியெனவும், அவர் ஆஸ்திரேலியாவில் பதவிகளை வகிக்கக்கூடாது எனவும் மிரட்டி அவர் கடந்த மார்ச் மாதம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
'நீங்களும், உங்கள் முஸ்லிம்களும் பாலைவனத்தக்கு திரும்ப வேண்டும், ஆஸ்திரேலியாவை அழித்துவிடாதீர்கள்." எனவும் அவர் மின்னஞ்சல்மூலம் மிரட்டில் விடுத்திருந்தார்.
இது தொடர்பில் செனட்டர் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.