ஆஸ்திரேலியாவுக்குள் கொக்கைன் போதைப்பொருள் கடத்தியவந்த நிலையில் பேர்த் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஜேர்மன் பிரஜை, இன்று பேர்த் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
77 வயதான குறித்த நபர் கடந்த 8 ஆம் திகதி பேர்த் விமான நிலையம் வந்துள்ளார்.அவர் கொண்டுவந்த சூட்கேஸ்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது 4 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் விசாரணைகளின் பின்னர் ஆகஸ்ட் 9 ஆம் திகதி பேர்த் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பின்னர் 21 ஆம் திகதிவரை காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே இன்று நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.