ஆஸ்திரேலியர்களுக்கு மரணப் பொறியாக மாறியுள்ள வீதி விபத்துகள்!
ஆஸ்திரேலியாவில் வீதி விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக பாதசாரிகள் பலியாவது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 205 பாதசாரிகள் பலியாகியுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் கடந்த ஜுலை 31 ஆம் திகதிவரை வீதி விபத்துகளால் ஆயிரத்து 340 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2.9 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன், பலியான பாதசாரிகளின் எண்ணிக்கை 27.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதே இவ்வாறு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என கவலை வெளியிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டாகும்போது வீதி விபத்துகளின் எண்ணிக்கையை 50 சதவீதத்தால் குறைப்பதற்கு ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.