நியூ சவூத் வேல்ஸ், லேக் மெக்குவாரியிலுள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு 8.40 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 32 வயது இளைஞன், பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 17 வயது இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வசம் போதைப்பொருளும் இருந்துள்ளது.
இவர்களை சிறார் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே அங்காடியில் நேற்று காலை 83 வயது முதியர் ஒருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, பேர்த் தெற்கு பகுதியில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் வயோதிபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
81 வயது பெண்மீதே அயர்வீட்டுக்காரரான 76 வயது ஆண் தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.