மத்திய குயின்ஸ்லாந்தில் 27 வயது இளைஞன் ஒருவர் இன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச்சம்பவம் தொடர்பில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டாலும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருவருக்கிடையிலான வாக்கு வாதத்தையடுத்தே கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து ஆணும், பெண்ணும் தப்பியோடியுள்ளனர். இந்நிலையில் 36 வயது ஆணும், 20 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.