அரசியல் களத்துக்குள் தான் மீண்டும் வரப்போவதில்லை என்று பெடரல் அரசியலின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் அறிவித்துள்ளார்.
வயது மூப்பை இதற்குரிய காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய பீட்டர் டட்டன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து செயற்பாட்டு அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற லிபரல் கூட்டணி மாநாட்டில் பீட்டர் டட்டன் பங்கேற்றார்.
சக உறுப்பினர்களுடன் பின் வரிசையில் அமர்ந்து, கூட்டணியின் தற்போதைய தலைவர் சூசன் லேயின் உரையை செவிமடுத்தார்.
இந்நிகழ்வின் பின்னர் பீட்டர் டட்டனிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.
மீண்டும் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, இல்லை நண்பர்களே, வயதாகிவிட்டது என பதிலளித்துள்ளார்.