ஆஸ்திரேலியாவுக்கும், பப்புவா நியூ கினியாவுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.
பப்புவா நியூ கினியா சுதந்திரமடைந்து 50 வருட நிறைவு விழா அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையிலேயே மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் பப்புவா நியூ கினியா மக்கள் அந்நாட்டு பாதுகாப்புப் படைகளில் பணியாற்றுவதன் மூலம் ஆஸ்திரேலிய குடியுரிமையைப் பெறவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், இரு நாடுகளின் இராணுவங்களும் ஒருவருக்கொருவர் தளங்களுக்கு அதிக அணுகலை வழங்கவும் அனுமதிக்கும்.
பப்புவா நியூ கினியா ஆஸ்திரேலியாவிடமிருந்து விடுதலைப் பெற்று 50 ஆண்டுகள் ஆகும் நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.