சிறைச்சாலை வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
எனினும், அவரின் நிலை ஆபத்தாக இல்லை எனலும், வயது மூப்பு மற்றும் நாட்பட்ட நோயினால் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய அவர் மகஸின் சிறைச்சாலைக்கு அனுப்பட்டார்.
உயர் குருதி அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சக்கரை மட்டம் அதிகரிப்பு என்பவற்றால் வைத்திய ஆலோசனைக்கமைய அவர் சிறைச்சாலை வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சில பரிசோதனைகளுக்காக ரணில் விக்கிரமசிங்க நேற்று பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். அவசர சிகிச்சைப் பி ரிவில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் நீர்சத்து குறைப்பாடு காரணமாக அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெளியில் இருந்து உணவு பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.