முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அரசர சந்திப்புகள், இராஜதந்திரக் கூட்டங்கள், எதிர்க்கட்சி தலைவர்களின் ஒன்றிணைவு , ஊடக சந்திப்புகள் என்பவற்றால் கொழும்பு அரசியல் கொதி நிலை ஏற்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேற்று காலை வெலிக்கடை – மகஸின் சிறைச்சாலைக்கு படையெடுத்து சென்றிருந்தனர்.
ரணில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னரும் அரசியல்வாதிகள் அங்கு திரண்டனர்.
அத்துடன், ரணில் கைது விவகாரத்தில் அடுத்து எ ன்னவென்பது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர்கள் கொழும்பில் முகாமிட்டு நேற்று ஆராய்ந்தனர்.
இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையெனக் கருதும் ஐக்கிய தேசியக் கட்சி, இவ்விகாரத்தை சர்வதேச மயப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, பொதுநலவாய அமைப்பு மற்றும் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு கடிதம் எழுதவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டங்களை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகிவருகின்றது என அறியமுடிகின்றது. எதிரணி தரப்பில் இன்று விசேட அறிவிப்பொன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.