ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் இன்னும் நேரடி சந்திப்பு இடம்பெறவில்லை.
எனவே, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரின்போது இச்சந்திப்பு சாத்தியப்படுமா என்று பிரதமரிடம் இன்று கேள்வி எழுப்பட்டது.
அவர் நேரடி பதிலை வழங்கவில்லை. எனினும், ட்ரம்பை விரைவில் சந்திக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஐ.நா. தொடரின்போது ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளிட்ட தரப்பினரை பிரதமர் சந்திக்கவுள்ளார்.