ஆஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் நேற்று பாலஸ்தீன ஆதரவு பேரணிகள் இடம்பெற்றன. இவற்றில் பெருமளவானோர் பங்கேற்றிருந்தனர்.
சிட்னி மற்றும் மெல்பேர்ண் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற பேரணிகளில் 2 லட்சம்பேர்வரை பங்கேற்றனர் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பிரிஸ்பேனில் ஸ்டோரி பாலத்தில் இடம்பெறவிருந்த பேரணிக்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. இதனையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு நடந்த பேரணியில் 50 ஆயிரம் பேர்வரை பங்கேற்றுள்ளனர்.
"ஆஸ்திரேலியாவின் குரல் மிகவும் தெளிவாக உள்ளது, எங்களுக்கு அமைதி வேண்டும், இஸ்ரேலிய அரசாங்கத்தின் மீது தடைகள் வேண்டும்." - என்று குயின்ஸ்லாந்து மாநில கிறீன்ஸ் கட்சி தலைவர் தெரிவித்தார்.
விக்டோரியா, அடிலெய்டு ஆகிய நகரங்களிலும் பேரணிகள் இடம்பெற்றன.