ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் இடம்பெற்ற யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருந்துள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
' இரு யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்களுக்கு ஈரான் காரணமாக இருந்துள்ளது." - என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.
2024 ஒக்டோபர் 20 சிட்னியில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் டிசம்பர் 6 ஆம் திகதி மெல்பேர்ணில் அடாஸ் இஸ்ரேல் ஜெப ஆலயம்மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரான் இருந்துள்ளது என ஆஸ்திரேலிய உளவு பிரிவுகள் தீர்மானித்துள்ளன எனவும் பிரதமர் கூறினார்.
இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள ஈரான் தூதுவரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஈரானில் உள்ள தூதரக செயற்பாடுகளை ஆஸ்திரேலியா இடை நிறுத்தவுள்ளது.