வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஆணொருவர் 39 வயதுடைய பூர்வக்குடி பெண்ணொருவரைக் கொலை செய்துள்ளார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதியே Palm Island. தீவில் இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலைப்பகுதியில் ஆபத்தான காயங்களுடன் காணப்பட்ட குறித்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, இரு நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் 36 வயது ஆணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.