" தேடப்படும் போர்க்குற்றவாளிகளுடன் கூட்டு சேரும் பழக்கம் எனக்கு இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவின் பிரதமர் பலவீனமான அரசியல்வாதி என்ற இஸ்ரேல் பிரதமரின் கூற்று சரியானது."
இவ்வாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
' ஆஸ்திரேலியாவில் உள்ள யூத ஜென ஆலயங்களை ஈரான் தாக்கியதாகக் குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது.
யூத தளங்களை பாதுகாக்க நாம் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.
பாலஸ்தீனத்திற்கு ஆஸ்திரேலிய மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு ஈரான் தலை வணங்குகின்றது.
இந்நிலையில் ஆஸ்தரேலியாவின் நடவடிக்கை நெதன்யாகு மற்றும் அவரைப் போன்றவர்களை தைரியப்படுத்தும் எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் விசனம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரான் தூதுவரை வெளியேற்றும் ஆஸ்திரேலியாவின் முடிவை யூத சமூகம் வரவேற்றுள்ளது.
அத்துடன், ஈரான் இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடும் நடவடிக்கையும் பாராட்டியுள்ளது. எனினும், இது தாமதமான முடிவு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேபோல ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேல் தூதுவரும் இம்முடிவை வரவேற்றுள்ளார். ஏனைய நாடுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நடவடிக்கை "மிகவும் கணிசமான பிரதிபலிப்பாகும்" என்று வெளிவிகார அமைச்சர் பெனி வோங் இன்று அறிவித்தார்.