பாடசாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
சுமார் 28 மாணவர்களுடன் பயணித்த குறித்த பஸ் இன்று காலை விக்டோரியா, பகுதியில் விபத்துக்குள்ளானது.
விபத்தையடுத்து பெற்றோர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பலர் சம்பவ இடம் நோக்கி படையெடுத்தனர்.
மாணவியொருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
11 மாணவர்கள் மருத்துவ கண்காணிப்புக்காக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 76 வயதான பஸ் சாரதியும் காயமடைந்துள்ளார்.