நாடாளுமன்ற உறுப்பினர் பாப் கட்டர், ஊடகவியலாளர் ஒருவர்மீது சீறிப்பாய்ந்து, அவரை அச்சுறுத்தும் விதத்தில் செயற்பட்டுள்ளார்.
பிரிஸ்பேனில் நடந்த ஊடக சந்திப்பின்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் லெபனான் பாரம்பரியம் பற்றி கேள்வி எழுப்பட்டது.
இதனையடுத்தே அவர் கடுப்பாகி, சரமாரியாக விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். ' இந்த கேள்வி என்னை எரிச்சலூட்டுகின்றது.
எங்கள் குடும்பம் 140 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்கின்றது. நான் ஆஸ்திரேலியன். நீங்கள் இனவெறி பிடித்தவர், அதனால்தான் இப்படி கேட்கின்றீர்கள்." எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.
கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை நோக்கி ஆட்காட்டி விரலைக்காட்டி மிரட்டினார். ஊடகர் மீண்டும் கேள்வி எழுப்ப முற்பட்டபோது அருகில் வந்து ஊடகவியலாளரை தாக்கும் பாணியில் விரல் காட்டி எச்சரித்தார்.