ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
மேற்படி இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கிடையிலான கூட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
இதன்போதே இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
" இந்தோனேசியாவானது ஆஸ்திரேலியாவின் மிக முக்கிய பங்காளி என்பதுடன் மூலோபாய கூட்டாளியும்கூட.
அமைதியான, நிலையான மற்றும் வளமான ஒரு பிராந்தியத்தில் எமது உறவு தொடரும்." - என்று வெளிவிவகார வெளிவிவகார அமைச்சர் குறித்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
" மத்திய கிழக்கில் வன்முறை சுழற்சியை உடைப்பதில் இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
மத்திய கிழக்கு மக்களுக்கு அமைதியான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பதை இரு நாடுகளும் அறியும்.
மேலும் பாலஸ்தீன ஆணையத்தின் உறுதிமொழிகளில், குறிப்பாக கல்வி மற்றும் பள்ளிப்படிப்புத் துறைகளில் இணைந்து பணியாற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." - எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.