இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் இன்று ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகின்றது.
விக்டோரியா வனப்பகுதியில் பெருமளவான படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
பனி மழை மற்றும் சீரற்ற காலநிலையால் தேடுதல் நடவடிக்கையை முழு வீச்சுடன் முன்னெடுக்க முடியாத சூழ்நிலையும் நிலவுகின்றது.
விக்டோரியாவில் போரேபுன்கா நகரிலுள்ள வீடொன்றுக்கு வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் சென்றிருந்த வேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தையடுத்து துப்பாக்கிதாரி தலைமறைவானார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிக்கும் குழுவை சேர்ந்தவர் என்பதால் காடுகளில் தலைமறைவாக பதுங்கி இருப்பது பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.