ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து விடுவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வெளிநாட்டு குற்றவாளிகள் நவ்ருவுக்கு நாடு கடத்தப்படவுள்ளனர்.
400 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பர்க் கைச்சாத்திட்ட பிறகு இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் 350 வெளிநாடுகளில் பிறந்த குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு செல்ல மறுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து இருந்துவருகின்றனர்.
ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு சட்டப்பூர்வ விசா இல்லாதவர்களை நவ்ரு தீவுக்கு நாடு கடத்துவதற்குரிய ஒப்பந்தம் ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய விடுவிக்கப்பட்ட நபர்களுள் சுமார் 28 பேர் சமூகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.