குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியா செல்லவிருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது பயணத்தை இரத்து செய்துள்ளார் என தெரியவருகின்றது.
அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனையால் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதனிடையில் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு டிரம டிரம்ப் 50 சதவீதம் வரிவிதித்தார்.
இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இவ்வருடம் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி பங்கேற்கவுள்ளார். இதற்குரிய அழைப்பை விடுப்பதற்காக இந்திய உயர்மட்ட பிரமுகர் ஒருவர் கன்பரா வரவுள்ளார் என அறியமுடிகின்றது.