ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் 40 ஆயிரத்து 87 பேர் பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளனர். 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10 சதவீத அதிகரிப்பாகும்.
நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்திலேயே அதிகளவு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீத அதிகரிப்பாகும். குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா என்பன அடுத்த இடங்களில் உள்ளன.