நியூ சவூத் வேல்ஸ் மாநில பிரிமியருக்கு கொலை மிரட்டல் விடுத்த யுவதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல், கொலை மிரட்டல் உட்பட மூன்று குற்றச்சாட்டுகள் குறித்த 27 வயது யுவதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளம் ஊடாகவே தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது.
குறித்த யுவதி தற்போது பிணையில் இருந்தாலும் இம்மாத இறுதியில் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.