சீனாவில் நடைபெற்ற பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் விக்டோரிய மாநில முன்னாள் பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் பங்கேற்றமை தொடர்பில் லிபரல் கூட்டணி கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அவருக்கு எதிராக லேபர் கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸை கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
ரஷ்ய மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுடன் இணைந்து ஆண்ட்ரூஸ் பங்கேற்றமை தொடர்பில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கிடம் கேள்வி எழுப்;;பப்பட்டது.
அவரின் பங்கேற்;பு குறித்து வெளிவிவகார அமைச்சர் கண்டனம் வெளியிடவில்லை. எனினும், அதன்மூலம் அவர் வழங்கியுள்ள செய்தி தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சார்பில் தூதரக மட்ட அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.