பூர்வக்குடி மக்கள்மீது தாக்குதல் நடத்திய நவ- நாஜிகள் தலைவர் பிணை பெறும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளார்.
மெல்பேர்ண் நீதிமன்றத்தில் அவர் நேற்று முற்படுத்தப்பட்டபோது , அவரின் நடத்தமூலம் பொதுமக்களுக்கு ஆபத்தானவர் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்து அழைத்துசெல்லப்படும்போது, “ வெள்ளை ஆஸ்திரேலியர்களுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.” – என்று நவ நாஜிகள் தலைவர் கோஷம் எழுப்பினார்.
அங்கு திரண்டிருந்த நவ நாஜிகள் குழு, ஆஸ்திரேலியா வாழ்க, வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.
வெளிநாட்டு குடியேற்றத்துக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ணிலும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்த நவ நாஜிகள் தலைவர் உள்ளிட்ட குழு, பூர்வக்குடி மக்களின் போராட்ட முகாமுக்கு சென்று தாக்குதல் நடத்தினர்.
இதில் ஐவர் காயமடைந்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நவ நாஜிகள் தலைவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முற்படுத்தப்படவுள்ளார்.