ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடம் செனட்டர் ஜெசிந்தா நன்பிஜின்பா பிரைஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் ஹான் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
வாக்கு வங்கிக்காகவே பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகளை லேபர் அரசாங்கம் ஏற்கின்றது என செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ் வெளியிட்டுள்ள கருத்து வெளியிட்ட கருத்து இந்திய சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு குடியேற்றத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் இடம்பெற்ற சூழ்நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், செனட்டர் இந்தியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தது.
அவரின் கருத்தை எதிர்க்கட்சி தலைவர் சூசன் லேயும் வன்மையாகக் கண்டித்திருந்தார்.
இந்நிலையிலேயே எதிர்க்கட்சி மேலாலரும் கண்டித்துள்ளார்.
இந்நிய சமூகத்தினரிடம் மன்னிப்பு கோரி சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவருமாறு அவரிடம் கோரியதாக அலெக்ஸ் ஹான் கூறினார்.
எனினும், மன்னிப்பு கோருவதில் செனட்டர் இழுத்தடிப்பு செய்துவருகின்றார். எதிர்க்கட்சி தலைவர் கூற்றை கண்டித்திருந்தாலும் அவரும் மன்னிப்புகோர மறுத்துள்ளார்.