ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய மற்றும் பழமையான சுற்றுச்சூழழல் அமைப்புகளில் ஒன்றான ஆஸ்திரேலிய பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக கிறீன்ஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆடம் பாண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மெல்பேர்ண் தொகுதியில் இவர் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கிறீன்ஸ் கட்சிக்கு புதிய தலைவரும் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையிலேயே ஆடம் பாண்ட்டுக்கு புதிய பதவி கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலிய பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைமைப் பதவியை வகித்த கெல்லி ஓ ஷான்சி இம்மாத ஆரம்பத்தில் பதவி விலகும் அறிவிப்பை விடுத்தார். வருட இறுதிவரை அவர் அப்பதவியில் தொடர்வார்.
புதிய தலைவர் ஆடம் பாண்ட் எதிர்வரும் ஜவனவரி மாதம் புதிய பொறுப்பை ஏற்பார். இனி அவர் கிறீன்ஸ் கட்சியில் எந்த பங்கையும் வகிக்க மாட்டார் என அறக்கட்டளை அறிவித்துள்ளது.