லிபரல் செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்யா பிரைஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக ஆஸ்திரேலியாவில் வாழும் இந்த சமூகத்திடம் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜுலியன் லீசர் மன்னிப்பு கோரியுள்ளார்.
லீசர் சட்ட விவகாரங்களுக்கான எதிரணி செய்தி தொடர்பாளராக செயற்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்கு வங்கிக்காகவே பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகளை லேபர் அரசாங்கம் ஏற்கின்றது என செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ் வெளியிட்டுள்ள கருத்து வெளியிட்ட கருத்து இந்திய சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டு குடியேற்றத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராட்டம் இடம்பெற்ற சூழ்நிலையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், செனட்டர் இந்தியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்தது. எனினும், அவர் இது விடயத்தில் மௌனம் காத்துவருகின்றார்.
இந்நிலையிலேயே லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் உள்ள இந்திய சமூகத்தினிரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னேற்றத்துக்கு இந்திய சமூகம் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.