செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்திடம் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே மன்னிப்பு கோரியுள்ளார்.
இந்திய சமூகத்தை இலக்கு வைத்து செனட்டர் ஜசிந்தா கருத்து வெளியிட்டு எட்டு நாட்களுக்கு பின்னரே இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
செனட்டரின் கருத்தால் வருத்தத்துக்கு உள்ளான இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே குறிப்பிட்டார்.
நிழல் அமைச்சரவையில் இருந்து செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ் எதிர்க்கட்சி தலைவரால் நேற்று நீக்கப்பட்டார். இதனையடுத்து முன்வரிசையில் இருந்தும் அவர் ஓரங்கட்டப்படுவார் என தெரியவருகின்றது.