விக்டோரியா மாநில பிரிமீயர் ஜெசிந்தா ஆலன், ஐந்து நாள்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார்.
விக்டோரிய மாநிலத்தில் சீன முதலீடுகளை ஈர்க்கும் வகையிலேயே அவரது பயணம் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
திங்கட்கிழமை முதல் அவர் முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
' சுற்றுலாத்துறை, கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் சுத்தமான எரிசக்தி போன்ற துறைகள் பற்றி கலந்துரையாடப்படும்." - என்று பிரீமியர் தெரிவித்தார்.
விக்டோரிய மாநில பிரீமியராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் ஜெசிந்தா ஆலன் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும்.
இதற்கு முன்னர் விக்டோரிய மாநில பிரிமீயராக பதவி வகித்த ஆண்ட்ரூஸ், சீனாவுடன் சிறந்த உறவை பேணினார். வருடாந்தம் சீனா சென்று வந்தார். சீனாவில் அண்மையில் நடந்த இராணுவ அணிவகுப்பு நிகழ்வுக்குகூட அவர் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.