ஆபிரிக்க நாடான காங்கோவில் இடம்பெற்ற இறுவேறு படகு விபத்துகளில் குறைந்தபட்சம் 193 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளனர்.
ஈக்வடார் என்ற மாகாணத்திலேயே கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
ஆபிரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக செல்கின்றனர். அதில் சட்டவிரோதமாக படகில் செல்கின்றனர்.
உள்நாட்டு போக்குவரத்துக்காகவும் படகு போக்குவரத்து பயன்படுத்தப்படுகின்றது.
இந்நிலையில் காங்கோ ஆற்றில் 500 பயணிகளுடன் பயணித்த படகு தீப்பிடித்து எரிந்து, கவிழந்துள்ளது. இதில் பலர் பலியானார்கள். 200 இற்கு மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், மோட்டார் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் பலியாகியுள்ளனர்.