ஹமாஸ், ஹிஸ்புல்லா உட்பட மூன்று பயங்கரவாத அமைப்புகள்மீதான தடையை ஆஸ்திரேலியா நீடித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் செயற்படும் ஹமாஸ், லெபனானில் இயங்கும் ஹிஸ்புல்லா மற்றும் பாலஸ்தீன ஜிஹாத் என்பவற்றின் மீதான தடையே நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புடைய 30 நிறுவனங்கள் , 10 தனி நபர்கள் மீதான நிதி உள்ளிட்ட தடைகளும் நீடிக்கப்பட்டுள்ளது.
எனவே, தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளுடன் தொடர்பை பேணும், சொத்துகளை பயன்படுத்தும் நபர்களின் செயல்கள் குற்றவியல் குற்றமாகவே கருதப்படும்.
10 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும், கடும் அபராதமும்கூட விதிக்கப்படும்.
பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முடிவை ஆஸ்திரேலியா எடுத்திருந்தாலும் அங்கு அமையும் நிர்வாகத்தில் ஹமாஸ் அமைப்பின் பங்களிப்பு இருக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.