ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. ஜுலை மாதம் 3.5 சதவீதமாக இருந்த பணவீக்க வீதம் ஆகஸ்ட் மாதம் 2.7 வீதமாக குறைந்துள்ளது.
எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் கூட்டாட்சி அரசின் எரிசக்தி நிவாரணம் உள்ளிட்ட விடயங்களாலேயே பணவீக்கம் குறைவடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மாதாந்த பணவீக்க வீதம் இம்முறையே இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, வட்டி விகிதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தாதிருக்கும் முடிவை மத்திய வங்கி நேற்று எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.