வெப்ப அலையால் ஏற்படும் கடல்மட்ட உயர்வு காரணமாக ஆஸ்திரேலியர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கரையோர பகுதிகளில் வாழும் சுமார் 15 லட்சம் ஆஸ்திரேலியர்கள் உயிராபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இன்று வெளியிடப்பட்டுள்ள காலநிலை மதிப்பீட்டு அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெப்ப அலையால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய உலகளாவிய வெப்பமயமாதல் 3 டிகிரி செல்சியத்தை தாண்டினால் சிட்னியில் இறப்பு வீதம் 450 சதவீதத்தால் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடல் மட்ட உயர்வதால் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை கொண்ட கடலோர சமூகங்களுக்கு ஏற்படும் அபாயமும் மேற்படி அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளம், கடலரிப்பு மற்றும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஆஸ்திரேலியாவில் 2050 ஆம் ஆண்டளவில் கரையோர பகுதிகளில் வாழும் 15 லட்சம்பேர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். இந்த எண்ணிக்கை 2090 ஆம் ஆண்டாகும்போது 30 லட்சம்வரை அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.