16 வயது சிறுவனொருவரை குத்திக்கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் சிறார் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.
மெல்பேர்ணில் உள்ள பல்பொருள் அங்காடி வளாகத்திலேயே நேற்று முன்தினம் குறித்த கத்திக்குத்து தாக்குல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான 16 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறார் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.
அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் வாசிக்கப்படவில்லை. சிறுவன் பிணைகோரி விண்ணப்பிக்கவில்லை. வழக்கு விசாரணை மீண்டும் ஜனவரியில் இடம்பெறவுள்ளது.