பிரிஸ்பேன் வடக்கில் கார் கடத்தலில் ஈடுபட்ட 35 வயது ஆணும், 26 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சால்ட்வாட்டர் க்ரீக் சாலை பகுதியில் வைத்தே குறித்த ஜோடி இன்று காலை பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்மீது தலா மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணைகள் தொடரும் நிலையில் இவர்களுக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்டுள்ளது. நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இந்த ஜோடி சில நபர்களை தாக்கியுள்ளதாகவும், கார்கள் சிலவற்றை கடத்த முற்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.