தெற்கு ஆஸ்திரேலியாவின் துணை பிரமீயர் சூசன் குளோஸ் மற்றும் பொருளாளர் ஸ்டீபன் முல்லிகன் ஆகியோர் அரசியலில் இருந்து விடைபெறும் முடிவை அறிவித்துள்ளனர்.
அத்துடன், அமைச்சரவையில் தாம் வகித்த பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளனர்.
இரு அமைச்சர்களும் இது பற்றி தன்னிடம் தனித்தினயாக தெரியப்படுத்தினர் என்று மாநில பிரீமியர் தெரிவித்தார்.
' இவர்களின் பதவி விலகல் கவலையளிக்கின்றது. அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளனர். அவர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றியுள்ளனர்." -எனவும் பிரீமியர் குறிப்பிட்டார்.
புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படவுள்ளது.