மெல்பேர்ணில் இம்மாத தொடக்கத்தில் இரு சிறார்கள் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கத்திகள் சகிதம் வந்த குழுவொன்று 12 மற்றும் 15 வயதுடைய சிறார்கள்மீது தாக்குதல் நடத்தியது.
படுகாயமடைந்த சிறார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த பொலிஸார் இன்று காலை ஏழுபேரை கைது செய்தனர்.
15, 16 வயதுடைய நான்கு சிறார்கள், 18,19 வயதுடைய மூன்று இளைஞர்கள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மெல்பேர்ணின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.