தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு 416 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கடத்திய பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜைக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தலாக இது கருதப்படுகின்றது.
48 வயது நபரொருவருக்கே தெற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றத்தால் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பின்னரே அவர் பிணைகோரி விண்ணப்பிக்க முடியும்.
2022 ஆம் ஆண்டு வணிகக் கப்பலொன்றை சோதனையிட்டபோதே கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்துடன் இரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தொடர்பு பட்டிருந்தனர்.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. 2025 மே மாதம் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நபருக்கே நேற்று மேற்படி தண்டனை வழங்கப்பட்டது. மற்றைய நபருக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் தண்டனை வழங்கப்படவுள்ளது.