நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றுள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான நட்பு ரீதியிலான இந்த சந்திப்பின் பின்னர், செல்பி எடுத்து அதனை தனது சமூக வலைத்தல பக்கத்தில் பிரதமர் அல்பானீஸி பகிர்ந்தளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னர் அவருக்கும், அல்பானீஸிக்கும் இடையில் இன்னும் நேரடி சந்திப்பு நடக்கவில்லை.
இதற்கிடையில் ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளதால் பிரதமருடன், ட்ரம்ப் நேரடி சந்திப்பில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்நிலையில் இரு தரப்பு சந்திப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நட்பு ரீதியிலான நேரடி சந்திப்பு அமைந்துள்ளது.