சுதந்திர பாலஸ்தீனம் என ஸ்டீக்கர் ஒட்டப்பட்டு பாலஸ்தீன கொடியை பறக்கவிடப்பட்டிருந்த கெப் ரக வாகனமொன்று தீ வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு சிட்னியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றே இவ்வாறு தீ வைப்பு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து தீயைக் கட்டுப்படுத்தினர். எனினும், வாகனம் பகுதியளவு எரிந்துவிட்டது.
தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது என வாகனத்தின் உரிமையாளர் உமர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.