விக்டோரியா மாநிலத்தில் இடம்பறும் குற்றச்செயல்கள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஓராண்டுக்குள் மாத்திரம் 6 லட்சத்து 38 ஆயிரத்து 640 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இது 15.7 சதவீத அதிகரிப்பாகும்.
விக்டோரியா மாநிலத்தில் 6.9 மில்லியன் பேர் வாழ்கின்றனர் என்று 2024 ஆம் ஆண்டு சனத்தொகை பட்டியல் தெரிவிக்கின்றது.
இவர்களில் மீண்டும், மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 0.078 சதவீதமாக உள்ளது. இளைஞர்கள் மத்தியிலான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன.