இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 100 வீத வரி அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால் ஆஸ்திரேலிய சுகாதார நிறுவனங்களுக்க பெரும் தாக்கம் ஏற்படவுள்ளது.
குறித்த நிறுவனங்களின் இலாபம் தற்போதிலிருந்தே சரிய ஆரம்பித்துள்ளது. சிஎஸ்எல் எனப்படும் ஆஸ்திரேலிய தடுப்பூசி நிறுவனத்தின் பங்கு பெறுமதி 15 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் சில நிறுவனங்களின் பங்கு பெறுமதியும் சரிந்துள்ளது.
" ஒரு நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் மருந்து உற்பத்தி ஆலையைக் கட்டவில்லை என்றால், வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறோம். மருந்து நிறுவனம் கட்டுமானங்களை தொடங்கினால் இந்த மருந்துப் பொருட்களுக்கு எந்த வரியும் இருக்காது." என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அத்துடன், அக்டோபர் முதலாம் திகதி முதல் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், தளபாடங்களுக்கு 30 சதவீத வரியும், கனரக வாகனங்களுக்கு 25 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்தே அமெரிக்காவுக்கு அதிகளவு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, ட்ரம்ப்பின் வரி விதிப்பு இத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆஸ்திரேலியாவானது 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு 2.7 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.