இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த டெஸி பிரீமேனை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அவர் பற்றிய தகவல்கள் இன்னும் தெரியவரவில்லை.
கடந்த மாதம் 26 ஆம் திகதி விக்டோரியாவின் போரெபன்காவில் உள்ள வீடொன்றுக்கு நீதிமன்ற பிடிவிறாந்தை நிறைவேற்றுவதற்கு சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள்மீது 56 வயதான பிரீமேன் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
பின்னர் பொலிஸாரின் துப்பாக்கிகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
துப்பாக்கிச்சூட்டில் இரு பொலிஸ் அதிகாரிகள் பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார்.
விக்டோரிய பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அவர்களுக்கு புலனாய்வு அமைப்புகள் உதவின. இராணுவமும் களமிறக்கப்பட்டிருந்தது.
எனினும், இன்னும் அவரை பிடிக்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான பொலிஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.