ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர் இந்திய சமூகம் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் அங்கு சந்தித்து பேச்சு நடத்தினர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தை இலக்கு வைத்து லிபரல் கட்சி செனட்டர் ஒருவர் வெளியிட்டிருந்த கருத்துகள் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. அவரை நிழல் அமைச்சரவையில் இருந்து நீக்கும் நிலையைக்கூட இந்த சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாறான நிலையிலேயே இந்த சமூகத்தை புகழ்ந்து ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தமது நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இரு நாட்டு அமைச்சர்களும் அழைப்பு விடுத்துக்கொண்டனர்.