பிரிஸ்பேனில் பல்பொருள் அங்காடியில் ஆணொருவரை குத்திக் கொலைசெய்துவிட்டு, யுவதியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற நபர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 44 வயது நபரொருவரே சம்பவ இடத்திலேயே பலியானார் என்று குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலை நடத்திவிட்டு 45 வயது நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் 18 வயது யுவதியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முற்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்து சந்தேக நபரை கைது செய்தனர். 18 வயது யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்மீது கொலை, பாலியல் வன்கொடுமை, அநாகரீக நடத்தை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவரை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.