இராணுவ வாகங்கள் மோதி விபத்து: 12 படையினர் காயம்!
ஆஸ்திரேலிய பாதுகாப்பு படையுடனான கூட்டு இராணுவ பயிற்சியின்போது சிங்கப்பூர் படைகளின் இரு இராணுவ வாகனங்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 12 படையினர் காயமடைந்துள்ளனர்.
குயின்ஸ்லாந்து இராணுவ பயிற்சி தளத்திலேயே நேற்றிரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 12 சிங்கப்பூர் படையினரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் எவருக்கும் பாரிய அளவிலான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
குறித்த கூட்டு இராணுவ பயிற்சியில் 6 ஆயிரத்து 200 படையினர் ஈடுபட்டுள்ளனர். 420 இராணுவ வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.
செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமான இப்பயிற்சி நவம்பர் 3 ஆம் திகதிவரை தொடரவுள்ளது.