விக்டோரியா கிழக்கில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்படும் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயது இளைஞர் ஒருவரே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 20 வயது இளைஞன் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
20 வயது இளைஞனும், 16 வயது சிறுவனும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இவருவரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.