உக்ரைன்மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. சுமார் 12 மணிநேரத்துக்கு மேலாக இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நால்வர் பலியாகியுள்ளனர். 70 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் 12 வயது சிறுமி ஒருவரும் அடங்குகின்றார் என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யா, உக்ரைனின் ஏழு பகுதிகளை நோக்கி சுமார் 600 ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவியதாக அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.
மோசமான இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட சபோரிஜியா பகுதியில் குறைந்தது 16 பேர் காயமடைந்ததா உக்ரைன் ஜனாதிபதி ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைன் உரிய வகையில் பதிலடி கொடுக்கும் என்றும், இந்தத் தாக்குதல் மாஸ்கோ தொடர்ந்து சண்டையிட்டு கொல்ல விரும்புகிறது என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இத்தாக்குதல் சம்பவத்தை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது. ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கான ஆஸ்திரேலிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.